புதன், 5 ஆகஸ்ட், 2009

குத்தாத முள்

உரசும்
மழைத்துளிகளை
குத்தாத முள்

பி’ராங்ளின்-9843921471

உண்மை நேர்மையாய்
குத்தாத முள்
பத்திரிக்கையாளரின் பேனாமுள்
நாகராஜ்

நடந்தும் குத்தாத முள்
என்னவள்

அருகில் இருப்பதால்
திவாகர்-9789630584

பசிக்கும் ஏழை
பசிக்க திருடுகையில்
குத்தாத முள்

அருணாச்சலசிவா-9884398283

குத்தாத முள்


மனிதனுக்கு ஜாதிமதம்
மனதுக்குள் இருக்கலாம்
குத்தாத முள் ஒன்று

வே.ராம்குமார்-9865244918

உழைப்பாளர் சிவந்த
உடலில் உற்பத்தியாகும்
வேர்வைதுளிகள் குத்தாத முள்

வைரபாரதி-9677210778

குத்தாத முள்
ஆனாலும் வலிக்கிறது
சொல்லாத காதல்

ஜனனி அந்தோணிராஜ்-9786455499

தூண்டில் தொங்கும்
மீனின் நினைவில் குத்தாத முள்

ராமலிங்கம்-9940771501

வாசலில் நெருஞ்சிமுள்
கோபத்தில் மனைவியிட்ட
கோலம்

கமரூதீன்-9940781914

உடன்பிறந்த போதும்
ரோஜாக்களுக்கு காயமில்லை
குத்தாத முள்

அருணாச்சல சிவா-9884398283

நீதியின் சின்னம்
தராசின் துலாக்கோல்
குத்தாதமுள்

ரா.ரவி-9842193103

தாய்மடி

தமிழருக்கு ஆறுதலான தாய்மடி
தனித்தமீழம்
திவாகர்-9789630584

முதியோர் இல்லம்
தாய்மடியில்
உறங்கும் பூனை
பி’ராங்ளின்-9843921471

இரவு பயம் பகலிலே!
உலா வருகிறது வெண்ணிலா
பொன்குமார்-9865809969


குளத்தில் கல் எறியாதே!
முகம் பார்க்கிறது நிலா

அப்துல்காதர்-9094483313


நிலவுக்கு இன்னொருமுகம்
நெருப்பாகி எரிகின்றதே!
சூரியனாய் பகல்நிலா
சந்திராமோகன்-9443841122


நள்ளிரவு உழைப்பு
பகல் தூக்கம் எழுப்பியது நிலா.

அருணாச்சலசிவா-9884398283


வரவேண்டியநேரத்தில்
வந்தால் மரியாதை பகல்நிலா

ரா.ரவி-9842193103


சூரியனைக்காணும் ஆசையில் வந்த்து
பகல் நிலா

பி’ராங்களின்-9843921471




புத்தன் படித்த
தாமரை முள்ளாகி
கீரியது இலங்கையில்.
யாதுமானவன்-


கீரியமலர்கள்தான்
இவர்களுக்கும்(திரு)மணம் உண்டு
முதிர்கன்னி

பாக்யராஜ்-9944087575


கூர்ந்து கேளுங்கள்
நீர்கள் கீரியமலரிலும் மரணஓலம்
கமரூதின்-9940781914


முட்களை கடந்து பறிக்க முயன்றேன்
அப்படியிருந்தும் கீரியது மலர்.
கா.இளையராஜா9245393937

கீரியமலர்களில் எல்லாம் சிகப்பு திரவம்
இலங்கை நந்தவனத்தில்

முகில்தினகரன்-9894125211


பறிக்க வந்த கரத்தை கீரியது மலர்
எனக்கு நானே பாதுகாப்பு என்று கூறியது முள்ளிடம்
நா.கி.பிரசாத்-9003030567





பாலியல் வல்லுறுவால் வளரும்இளம்பெண்கள்
கீரிய மலர்கள் கசாப்பில்

ரதின்-9444639481

மன்மதமலர்கள்
உயிர்களை கீரின
எய்ட்ஸ் முட்கள்

யாதுமானவன்-

கீரிய மலரில் வழிந்தது
பன்னீர் ரத்தம்
நுகரும் போது உறுத்தும்

அப்துல்பாசித்-9894089680

நிலப்பரப்பெங்கும்
பிளாஸ்டிக் பைகள்
கீரியமலராய் பூமி

ச.கோபிநாத்-9790231240

கீரிய மலர்களில்
கண்ணீர் பனித்துளி
ரா.ரவி9842193103

வாடும் வாசமலர்கள்
வரதட்சனை வாட்களால்
கீரிய மலர்.
-தேவேந்திரன்ரம்யா-

மலரினை காற்று
கீரியதோ என்னவளின்
கைவிரல்கள்

பாலாஜி-9941495485


செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009

வாலிதாசன்100வது நாளுக்கானகருக்கள்


மகிழ்ச்சியில்பார்வையற்றவன்
இறைவனும் கண்ணிருந்தும்
கண்டுகொள்ளாத்தால்

தாஸ்பன்னீர்-9751543787

முதியோர் இல்லத்தாய்
எத்துனை முயற்சித்தும்
பார்வையற்றோன்பார்த்த நிறமாய் கடந்தகாலம்
நா.கி.பிரசாத்-9003030567

பார்வையற்றோ பார்த்த நிரம் கருப்புதான்
உலகமும் மனிதர்களின் மனங்களும்
கருப்பாக இருப்பதால்

வே.ராம்குமார்-9865244918

பார்வையற்றோன்பார்த்த நிறம்
இல்லாத ஒன்று
நிழலின்நிழல்

அருணாச்சலசிவா-9884398283


வாலிதாசன்100வதுநாளுக்கான கருக்கள்


என்னை பின்தொடர்ந்து வருபவற்றில்
எதுவென தெரியவில்லை
என் நிழலின்நிழல்.

கண்ணன்-9600074777

ஒற்றைநாணயத்தின்
இருபக்கம்
நிழலின்நிழல்

தாஸ்பன்னீர்-9751543787
பார்வையற்றோன் பார்த்தநிறம்..

விழியுள்ளோரின் கண்தானத்தில்
பார்வையற்றோன்பார்த்த நிறம் பசுமை

அருணாச்சலசிவா-9884398283

முதிர்கன்னியின் கனவுகூட
பார்வையற்றோன் பார்த்த நிறமாய்

நா.கி.பிரசாத்-9003030567


ஆளைப்பார்க்காமலே மருந்து
பாவம் நோயாளிகள்,
அரசுமருத்துவமனையை
பார்வையற்றோன் பார்ப்பதில்லை,
நோயியும் தீர்வதில்லை
சோலச்சி-9788210863

பார்வையற்றோன்
பார்த்த நிறம்
வறுமை

சந்திரசேகர்-9688479134

வாலிதாசன்100வதுநாளுக்கான கருக்கள்


நிழலின் நிழல்

அவசர யுகத்தின் அவலம்
நகரவாழ்க்கை:
பாட்டியோடு கழித்த கிராமத்து நாட்கள்:
மனதுக்குள் நிழலின் நிழலாக.
மீனாதேவி

மரத்தின் நிழலின் அருகே
கோடாரியின் நிழல்

சந்திரசேகர்-9688479134


வெளிச்சம் உள்ளவரை மட்டுமே வருவது நிழல்.
வெளிச்சமில்லாதபோது
நமக்கு தெரியாமல் நம்மோடு இருப்பது
நிழலின் நிழல்.
கவிப்பிரியா-

தலமைக்கு பயிற்சி
தகுதிக்கு தாய்வீடு
நிழலின் நிழல்
தமிழாழி-9092604294

பழையபுகைப்படத்தில்
அம்மாவை
தேடுகிறேன் நிழலின்நிழல்
அருணாச்சலசிவா-9884398283


வாலிதாசன்100வதுநாளுக்கான கருக்கள்

இல்லாத ஒன்று
பயந்தது
தன் வால் கண்டு குரங்கு
தாஸ்பன்னீர்-9751543787

மாமியார் மருமகள் சண்டை
இந்தியா-பாகிஸ்தான் யுத்தம் போன்று
முற்றுப்புள்ளியாக இல்லாத ஒன்று.
ராஜசேகர்9750564260

இருக்கும் போது இல்லாத ஒன்று

இல்லாத போதுகிடைத்தது
நிம்மதி.
சுதர்சனசாமி-9488075465

யாமிருக்க பயமேன் என்னும்

நம்பிக்கையே மனதில்
இல்லாத ஒன்று
கொள்ளிடம்காமராஜ்-9894058651

இல்லாத ஒன்றுக்காய்

ஏங்கும் அனாதை குழந்தை
சந்திரசேகர்-9688479134

குடிகள் நிறைந்த ஊரில்

சாமிதவமிருந்ததுமனித
கட்சிவேண்டி இல்லாத ஒன்று
அருள்மொழி-9444280864

என் உயிர் நீஎன

ஓலமிட்டவன்அவளை
சுவைத்தபின் எங்கோ!இல்லாத ஒன்றாய்
.-மீனாதேவி-

வாலிதாசனின் 100 நாளுக்கான கருக்கள்

இல்லாதஒன்று...
வாழ்க்கையில் தேவை இல்லாத ஒன்று
எல்லா மனிதர்களுக்கும் இருக்கிறது
அகம்பாவமும் ஆணவமும்.
வே.ராம்குமார்-9865244918

எதிரான செயல்
உணர்வாளர் கைது
இந்திய இறையாண்மை இல்லாத ஒன்று.
எம்.எஸ்.வேல்-9940321326

மரநிழலில் மனித நிழல்
இல்லாத ஒன்று
நா.கி.பிரசாத்-9003030567

இல்லாத ஒன்றை
தன்னிடம் வைத்துக்கொண்டே
எல்லோரும் தேடுகிண்றனர்
கடவுளை. நா.கி.பிரசாத்-9003030567

விழுதில் ஊஞ்சல்
ஆடும் மரம்
இல்லாத ஒன்று
தமிழாழி-9092604294

செவ்வாய், 21 ஜூலை, 2009

தினமும்நாங்கள்-5

அரிசிபானைக்குள்
சில்லறைச்சத்தம்
அம்மாவின் ஞாபகம்
முருகேஸ்-9444360421


தப்பிவிட்டன குஞ்சுகள்
பாவம்
தாயைமட்டும் இழந்துவிட்டு

மஞ்சுளா9488055408


ஒழியவே இல்லை
தீண்டாமை
யாரும் பறித்து சூடாமல்
பூங்காவின் வேலிக்குள்
பூக்கள்
நிஷாந்த்-9003659771


தள்ளூபடி விலையில்
வாங்கினார்
தரமும் தள்ளூபடி
வலம்புரிலேணா-9894138439


என்பெயர் என்னவென்று
தெரியாதவனுக்கு கூட
தெரிந்து இருக்கு என் சாதியின் பெயர்

முருகன்-9715640263


வயிற்றை பட்டினிக்கு
தாரைவார்த்துவிட்டு
புத்தகம் வாங்குகிறான்
வறுமைக்கவிஞன்

ஷண்முகராஜா-9884781042


கிராமத்து மண்ணில்
வான் முட்டி நிற்கும்கட்டிடம்
என் பாட்டனார் உழுத நிலத்தில்
பாரதி-9444787853

தினமும்நாங்கள்-4


காற்றடிக்கும்போதெல்லாம்
கிளைக்கு கிளை மாறும்
வண்ணத்துப்பூச்சி
பார்ஸோ-


தூரிகை முத்தமிடாத
தூரத்து ஓவியம்
வானவில்

புதியவன்-9952676130


பச்சைபசல் வயல்
பார்த்து ரசித்தது
நான்கு கண்கள் பங்குபோட

சந்திரசேகர்-9688479134


மனித நடமாட்டத்தை
மறக்காமல்
புகைப்படம் எடுத்து வைத்தது
வானம் மின்னல்

அருள்ஜோதி-9443292559


காலாட்டிதான் சம்பாதிக்கிறார்கள்
நெசவாளிகளின்
எஜமான்கள்

பி.கே.தங்கராஜ்-9003390518


சமத்துவபுரத்தில்
ரத்த சகதி
சாதிச்சண்டை
கோபிநாத்9790231240


பெற்றோர் நடக்கமுடியவில்லை
மகள்
ஓடிப்போனதால்

நா.கி.பிரசாத்9003030567


ஊத ஊத
அழகாகும் காற்றுள்ள
பலூன்

செந்தில்ராஜா-9994220404


சிந்தும் கண்ணீரோடு
சிரித்துக்காட்டும் வாழ்க்கை
உடைபடும்தேங்காய்
அமீர்ஜான்-9840954846

தினமும்நாங்கள்-3


இன்னும் எத்துனை உயிர்கள்
கண்ணீரை உதிர்க்கிறது
கல்லரைப்பூக்கள்

அப்துல்ஜலில்-9940231211


மனிதனுக்கு
ஜாதிமதம் மனதுக்குள்
இருக்கலாம் குத்தாத முள் ஒன்று
ராம்குமார்-98655244918


அணையாதவிளக்கு
அடையாளப்படுத்தியது
அருகில் இறந்த தீக்குச்சியாய்

ரம்யா-


அழுதபடி பள்ளிக்குச்சென்றான்
ஆடுமேய்க்கும் சிறுவன்
மழைக்கு
நா.கி.பிரசாத்-9003030567


சிதறிக்கிடந்தது வானம்
பூமியில்
மழைநாளில்

ஆங்கரைபைரவி-9842633785


சாகும்போதுகூட
கைத்தட்டல் வாங்குகிறது
கொசு

சுதர்சனசாமி9488075465


வண்டிநிறைய ஆடைகள்
வெறும் உடம்புடன்
வண்டிக்காரன்

அன்புராஜ்-9003030577


பெண்கல்வி அவசியம்
சுவரின் மீது
சாணிதட்டும் சிறுமி
கன்னிக்கோவில்ராஜா9841236965

தினமும்நாங்கள்-2


போதையில் பயணம்
நொடியில் மரணம்
குழந்தையுடன் விதவை
அண்ணாமலை-9486424886


இடுப்பில் அமர்ந்து இருக்கும் குழந்தை
தனக்கு தானே தாலாட்டு பாடுகிறது
தழும்பும் நீர்க்குடம்
மரியதெரஸா-9282111071


ரசிக்கமுடியவில்லை
ஒழுகும் குடிசைக்குள்ளிருந்து
நிலவை
இளையராஜா-9245393937


வாசலில் நெருஞ்சிமுள்
கோபத்தில்
மனைவியிட்ட கோலம்
கமரூதீன்-9940781914


ஆடம்பர திருமணம்
மிச்சமில்லாமல் வலித்துபோட்ட இலைகள்
குப்பைத்தொட்டி அருகே
பசியுடன் ஏழை
ராஜகண்ணதாசன்-9488085950


புற்றுநோய் வரும் தெரிந்தே
புகைபிடித்தான்
எய்ட்ஸ்நோயாளி

அருணாச்சலசிவா-9884398283


மருத்துவதுறையில்
தன்னிறைவு
பிளாட்பாரத்தில்
பிரசவம்

முகில்தினகரன்-


மரங்களின் ஒற்றைக்கால்
தவம்
வரம் கிடைத்தது மனிதருக்கு
நிழல்
பா.தியாகு-9659906769


தூண்டில் சிக்கவில்லை
குளத்துக்குள் நகர்ந்துகொண்டே
இருக்கும் மேகம்
துரை-

தினமும்நாங்கள்..


பெண்பார்க்க வந்தனர்
நாய் குரைத்தது
திருடர்கள் வருவதாய்
இரா.ரவி-9842193103


சுற்றி வைக்கப்பட்ட
பூப்பந்துகள்
சூட மனமில்லை
பசியுடன் ஏழைச்சிறுமி

கவுதம்-999436826


இறைவா எங்களை நத்தையாக
படைத்திருக்கலாம்
கூடாவது கிடைத்திருக்கும்
சாலையோரவாசிகள்

அஜ்மல்ஹான்


குத்தாதமுள்
ஆனாலும் வலிக்கிறது
சொல்லாதகாதல்

ஜனனிஅந்தோணிராஜ்-9786455499


பூனைகுறுக்கே வந்தது
கண்டுதிரும்பி போனது
சகுணம் சரியில்லையென எலி
புதுயுகன்-9487904805


செத்துப்போனது நெருப்பு
அலறியடித்து வந்த
காலங்கடந்து தீயணைப்புவண்டி

கோவிந்தராஜ்-9994126257


நீரில்லை
காக்கை குளியலுக்கும்
வற்றிய நதி
பொன்குமார்-9865809969

திங்கள், 20 ஜூலை, 2009

தினமும் நாங்கள்

அனைவரும் ஊதியத்திற்காக
வேலைசெய்தால்,
உண்ணதமான உலகை யார்?
காப்பது இப்படிக்கு காற்று.
நெல்லை துர்கா
9894887705

தினமும் நாங்கள்

காற்றுக்கு என்ன
கர்வம்,
பாவம் பஞ்சை பந்தாடுகிறதே!
நா.கி.பிரசாத்
கோவை-9003030567

நெசவாளியின்
உடை
தோள்.
சந்திரசேகர்
கோவை-9688479134

சோலையில் மட்டுமல்ல
சேலையிலும் அழகுதான்
பூக்கள்.
எம்.எஸ்.வேல்
9940321326